நெல்லை பொருட்காட்சித்திடல் பேருந்து நிலையத்தில் இருந்து சீவலப்பேரிக்கு தோணித்துறை வழியாக நாள் ஒன்றுக்கு 9 முறை இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவை தற்போது 3 முறையாக குறைக்கப்பட்டு உள்ளது. காலை 7.30 மணிக்கு இயக்கப்பட்ட பேருந்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் காலையில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.