பண்ருட்டி, காமராஜ் நகர் இபி காலனியில் உள்ள கால்வாய் சிமெண்டு சிலாப் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் நிகழும் முன் கால்வாயை கடந்து செல்ல ஏதுவாக சிறுபாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.