பெங்களூரு ஒய்சாலாநகர் டி.சி.பாளையா மெயின் ரோட்டில் பாதசாரிகளின் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த நடைபாதையை சில வியாபாரிகள் ஆக்கிரமித்து பழக்கடை வைத்துள்ளனர். மேலும் சிலர் ஆட்டோக்களையும் நடைபாதையில் நிறுத்தி பழங்கள் வியாபாரம் செய்கிறார்கள். இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகளால் பயன்படுத்த முடிவதில்லை. சாலையில் இறங்கி நடக்கும்போது வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இதனால் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.