பெங்களூரு இந்திராநகர் 13-வது கிராஸ் எச்.ஏ.எல்.2-வது ஸ்டேஜ், 8-வது மெயின் சாலையில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் உள்ள மின்விளக்கு பகலிலும் ஒளிருகிறது. கடந்த சில தினங்களாக அந்த தெரு விளக்கு ெதாடர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.