ஆபத்தான மரக்கிளை அகற்றப்படுமா?

Update: 2023-05-28 14:24 GMT

பெங்களூரு ராஜாஜிநகர் 6-வது பிளாக்கில், டாக்டர் ராஜ்குமார் சாலையில் ராட்சத மரம் ஒன்று உள்ளது. கடந்த வாரம் சூறை காற்றுடன் பெய்த மழையின்போது, அதன் கிளை ஒன்று முறிந்தது. தற்போது முறிந்த கிளை கீழே விழாமல் தொங்கியபடி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அந்த கிளை முற்றிலும் முறிந்து, வாகன ஓட்டிகள் மீது விழுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, ஆபத்தான நிலையில் உள்ள அந்த கிளையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்