கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-05-28 07:38 GMT
சிவகிரி தாலுகா ராமநாதபுரம் பஞ்சாயத்து மேட்டுப்பட்டி கிராமம் இந்திரா காலனியில் வாறுகால் மற்றும் சிமெண்டு சாலை அமைப்பதற்காக தெருவினை தோண்டிப்போட்டு இரண்டு மாதமாகியும் எந்த பணியும் நடைபெறவில்லை. பொதுமக்கள் தெருவில் நடப்பதற்கும், வாகனங்களை பயன்படுத்துவதற்கும் இயலாத நிலை உள்ளது. இதனால் தினசரி வாழ்க்கை கடும் பாதிப்பிற்குள்ளாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் சிரமத்தினை உணர்வார்களா?

மேலும் செய்திகள்