தபால்நிலையம் இடமாற்றம் செய்யப்படுமா?

Update: 2023-05-28 07:38 GMT
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தபால் நிலையம் பல ஆண்டுகளாக மெயின் அருவிக்கு அருகே, குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்தது. அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்படுத்தி வந்த இந்த தபால் நிலையம் தற்போது குற்றாலம் இராமாலயத்தில் ஒதுக்குப்புறமான, ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் போதிய பாதுகாப்பின்றி செயல்படுகிறது. இதனால் அனைவரும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் அனைவருக்கும் பயன் தரும் வகையில் இந்த தபால்நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்