சேதம் அடைந்த சுற்றுச்சுவர்
திருப்பூர் காதர்பேட்டை மாநகராட்சி பள்ளி மற்றும் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளிக்கு இடைப்பட்ட பகுதியில் ரோட்டோரத்தில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தை சுற்றிலும் இரும்பு வேலிகளுடன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இரும்பு வேலிைய தாங்கி நிற்கும் கான்கிரீட் தூண்கள் உடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளன. எந்த நேரம் வேண்டுமானாலும் இவை கீழே விழக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முரளி, ராயபுரம். 98417 49158