தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன்கோவில் சாலையில் உள்ள உயர்நிலைப்பள்ளியின் எதிர்ப்புறம் அமைந்துள்ள அடிபம்பு துருப்பிடித்து உடைந்த நிலையில் உள்ளது. கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிபம்பை சீர்செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?