சேரன்மாதேவி பழைய பேருந்து நிலையத்தின் அருகே ெரயில்வே பீடர் ரோடு சந்திக்கும் இடத்தில் அபாயகரமான வளைவு உள்ளது. வேகத்தடை எதுவும் அமைக்கப்படாத இந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இங்கு வேகத்தடை அமைத்து விபத்துகளை தவிர்க்க வேண்டுகிறேன்.