நோயாளிகள் சிரமம்

Update: 2023-05-24 18:17 GMT

சேந்தமங்கலத்தில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனை நுழைவுவாயில் அருகில் 108 ஆம்புலன்ஸ் நிற்கும் இடம் அமைந்துள்ளது. அங்கு கான்கிரீட் தளம் உடைந்து காணப்படுகிறது. அத்துடன் அப்பகுதி சாய்வாக மாறியதால் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை வாகனத்திற்குள் ஏற்றும் போது சிரமம் ஏற்படுகிறது. எனவே அந்த கான்கிரீட் தளத்தை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

-பிரகாஷ் சூர்யா, சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்