திட்டக்குடி தாலுகா நல்லூர் ஒன்றியம் கொடிக்களம் கிராமத்தில் அம்மா பொண்ணுநகர் உள்ளது. இங்கு சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் தினசரி பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.