பாலம் கட்ட வேண்டும்

Update: 2023-05-24 11:54 GMT

கரூர் மாவட்டம் முத்தனூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி புகழூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த தரை பாலத்தை பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்திவந்தனர் . பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று குளித்து அழுக்குத் துணிகளை துவைத்து வந்தனர். தங்களது கால்நடைகளான ஆடு, மாடுகளை ஓட்டி சென்று மேய்த்து வந்தனர். விவசாயிகள் விவசாய தோட்டங்களுக்கு இடுபவர்களை வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்றும், விளைநிலங்களில் விளைந்த பொருட்களை வாகனங்கள் மூலம் மூலம் எடுத்தும் வந்தனர். இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலானதால் பாலம் மிகவும் சிதிலமடைந்தது. அதன் காரணமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த பாலத்தை முழுமையாக இடித்துவிட்டனர். ஆனால் பாலத்தை இடித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த பாலத்தை மீண்டும் கட்டித்தரபடவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்