தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பழைய பேருந்து நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிய கட்டுமானம் நடந்து வருகிறது. எனவே பயணிகள், பேருந்து நிலைத்தை ஒட்டிய சாலையின் இருபுறமும் நின்று பேருந்தில் ஏறி செல்கின்றனர். வெயில் மற்றும் மழை பெய்யும்போது அனைவரும் காத்திருந்து பேருந்தில் ஏறி செல்ல வசதியாக சாலையின் இருபுறமும் தற்காலிக பயணிகள் நிழற்கூடம் அமைத்துதர வேண்டுகிறேன்.