தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி 13-வது வார்டு ஆக்ஸிஸ் பேங்க் அருகில் உள்ள மீனாட்சி நகர் பூங்கா பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் புதர் மண்டிகிடக்கிறது. தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் விளையாடுவதற்கு இடம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகையால் பூங்காவை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.