நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொந்தகை - திருமலைராயன் பட்டினம் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நடந்து வரும் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.