நெல்லை-அம்பாசமுத்திரம் சாலை அகலப்படுத்தும் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக வெள்ளங்குளியில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. தற்போதைய கோடைகால வெயிலின் காரணமாக அனைவரும் சாலையின் ஓரத்தில் திறந்த வெளியில் நின்று பேருந்தில் ஏறிச் செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். சாலையின் அருகே தற்காலிக நிழற்குடை அமைத்துதரக் கேட்டுக்கொள்கிறேன்.