சீரமைக்கப்படாத சுடுகாடு

Update: 2023-05-21 11:54 GMT

கரூர் மாவட்டம், குளத்துப்பாளையத்தில் அப்பகுதியை சேர்ந்த இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் சுடுகாடு கட்டப்பட்டுள்ளது. இந்த சுடுகாட்டை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக சுடுகாடு சீரமைக்கப்படாதால் சுடுகாட்டுக்குள் ஏராளமான செடி, கொடிகள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுடுகாட்டை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்