பெங்களூரு காவல்பைரசந்திரா அம்பேத்கர் மருத்துவ கல்லூரி சாலையில் பாதசாரிகளின் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஏனெனில் அந்த நடைபாதையில் மணல் மற்றும் சாக்கடை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, நடைபாதையில் கிடக்கும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.