தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ளது பூதநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் சாலையோரம் திறந்த வெளியில் பொது கிணறு உள்ளது. பயன்பாடின்றி உள்ள இந்த கிணற்றின் தடுப்புச்சுவர் மேல் பெரியவர்கள், குழந்தைகள் ஆபத்தான நிலையில் உட்காருகின்றனர். இதனால் தவறி கிணற்றில் விழும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கிணற்றை முழுமையாக மூட வேண்டும் அல்லது கம்பி வேலை அமைக்க வேண்டும்.
-தங்கராஜ், பூதநத்தம், பாப்பிரெட்டிப்பட்டி.