வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?

Update: 2023-05-17 10:46 GMT

கரூர் மாவட்டம், நன்செய் புகழூர், தவிட்டுப்பாளையம் பகுதியில் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளன. ஆனால் தார் சாலையில் இருபுறமும் சாக்கடைக்கால்வாய் கட்டப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக மழைநீர் வீட்டிற்குள்ளேயும், ஊருக்குள்ளும் புகுந்து செல்வதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்