கரூர் மாவட்டம், குளத்துப்பாளையத்தில் இருந்து வேட்டமங்கலம் செல்லும் சாலையில் வேட்டமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே மின் மோட்டார் அறை கட்டப்பட்டு அதன் மூலம் நீரேற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின்மோட்டார் அறை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மின்மோட்டார் அறை தார் சாலை ஓரத்தில் உள்ளதால் பொதுமக்கள் நமாட்டத்தின்போது இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.