நடைபாதை இல்லாததால் பாதசாரிகள் அவதி

Update: 2023-05-15 02:49 GMT

பெங்களூரு எம்.ஜி. சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சாலையை அதிகாரிகள் விரிவாக்கம் செய்தனர். இதனால் அந்த நடைபாதையின் பெரும்பகுதி சாலையாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக பாதசாரிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்