தர்மபுரி மாவட்டம் உங்கரானஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட முக்கல்நாயக்கன்பட்டி சந்திப்பு சாலையில் இருந்து உத்தனூர் கிராமத்திற்கு இடையே செல்லும் சாலையோரம் கிணறு உள்ளது. ஆனால் இந்த கிணறு சுற்றுசுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரசாந்த், தர்மபுரி.