தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் பொது கிணறு உள்ளது. இந்த கிணறு மூடப்படாமல் திறந்தவெளியில் உள்ளது. இதனால் இந்த கிணற்றிற்கு அருகில் செல்வோர் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே உயிர் சேதம் ஏற்படும் முன்பு இந்த கிணற்றின் மேல் கம்பி வலை அமைத்து மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பார்களா?
-தென்றல், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.