வாசுதேவநல்லூர் அருகில் உள்ள வெள்ளானைக்கோட்டை கிராமத்தில் ஆலமரத்தடி பேருந்து நிறுத்தம் அருகில் தாமிரபரணி கூட்டு குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. இதிலிருந்துதான் பலகிராமங்களுக்கு குடிநீர் செல்கிறது. இந்த குடிநீர் தொட்டி முறையாக சுத்தப்படுத்தப் படாததால் குடி தண்ணீர் சேறும் சகதியுமாக உள்ளது. சுகாதாரமற்ற இந்த குடிநீரை பயன்படுத்துவதால் இந்தப்பகுதி மக்கள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள். தொட்டியை முறையாக சுத்தப்படுத்தி குடிநீர் வழங்க கேட்டுக்கொள்கிறேன்.