தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம், புதுக்காலனித்தெருவில் குடிநீர் வசதி இல்லை. வீடுகள் மற்றும் வீதிகளில் தனியாக குடிநீர்
இணைப்புகள் கொடுக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த பிறகும் குழாய்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோடை
காலத்தில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.