நெல்லை மாவட்டம் களக்காடு யூனியன் பத்மனேரி பாலத்திலிருந்து பிளவுக்கல் இசக்கியம்மன் கோவில் வரையிலான சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாவதோடு அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டுகிறேன்.