நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வந்த இ-சேவை மையம் கடந்த சில மாதங்களுக்கு முன் பூட்டப்பட்டது. இதனால் பொதுமக்கள் பட்டா மாறுதல், பட்டா, சிட்டா எடுத்தல் போன்ற பணிகளுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ரவி, எருமப்பட்டி, நாமக்கல்.