விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளின் மத்தியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேல்நிலை தொட்டிக்கு ஏறக்கூடிய படிகளும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. விபரீதம் ஏதும் நேர்வதற்கு முன்பாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.