பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தநிலையில் ஒரு மாதம் ஆகியும் அந்த பூ மாலைகள் அகற்றப்படாமல் அப்படியே காய்ந்து கிடக்கிறது. இதனை அந்த வழியாக செல்பவர்கள் பார்த்து முகம் சுழித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூ மாலைகளை உடனடியாக அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.