சங்கரன்கோவில்-திருவேங்கடம் சாலையில், தாலுகா ஆபீஸ் எதிரே அமைந்துள்ள களப்பாகுளம் பஞ்சாயத்திற்குட்பட்ட சண்முகா நகரின் சாலையை அமைப்பதற்கான ேவலைகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. சாலையை தோண்டியபிறகு இந்தப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்குள்ளாகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.