சுரண்டை நகராட்சி காமராஜர் வணிக வளாகம் அருகில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையின் பணிகள் முடிந்து தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துளசுரண்டை்ளது. ஆனால் பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் பொருத்தப்படாமல் உள்ளது. அதனால் நிழற்குடையில் காத்திருக்கும் பயணிகள் தரையில் அமர வேண்டிய சூழ்நிலை உள்ளது. பயணிகளின் வசதிக்காக இருக்கைகள் அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன்.