கோவை சிங்காநல்லூரில் ரெயில் நிலையம் உள்ளது. அங்குள்ள கட்டிடத்தில் சிங்காநல்லூர் என்ற ஊரின் பெயர் தவறாக எழுதப்பட்டு உள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் சரியாக எழுதப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு வருபவர்கள் குழப்பம் அடைகின்றனர். மேலும் தமிழில் மட்டும் வேண்டுமென்றே தவறான எழுதப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே ரெயில் நிலைய கட்டிடத்தில் ஊரின் பெயரை சரியாக எழுத வேண்டும்.