விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் இருந்து அத்தியூர் திருக்கை செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.