நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து சர்க்கரை ஆலை செல்லும் வழியில், கிராயூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் முன்புறம் சாலையோர புளியமரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் வேரோடு சாய்ந்து விட்டது. இதுவரை அந்த புளியமரம் அப்புறப்படுத்தாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இந்த புளிய மரத்தை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஸ், மோகனூர், நாமக்கல்.