ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல் செல்லும் சாலையில் மேலமங்கலகுறிச்சி அருகே வடிகால் பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவர் சேதமடைந்து விட்டது. இதனால் தற்போது மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து உள்ளனர். அந்த வழியாக கவனக்குறைவாக யாராவது வாகனங்களில் வந்தால், சாலையோரத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு அங்கு தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?