நாகையை அடுத்த புத்தூர்,ஜெகநாதபுரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அந்த சாக்கடை கழிவு நீருக்குள் புரண்டு எழுந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக பாதைகளில் ஓடித்திரிகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை வேண்டும்.