கொட்டாரத்தில் கவர்குளம் உள்ளது. இந்த குளம் முழுவதும் தாமரை செடிகள் வளர்ந்து காணப்படுவதால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அருகில் உள்ள கிணறுகளில் உள்ள தண்ணீரும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, தாமரை செடிகளை அகற்றி குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.