பண்ருட்டி தாலுகா அலுவலகத்திற்கு பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை போன்ற முக்கிய தேவைகளுக்காக 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்களுக்கு வெயில், மழை நேரங்களில் சிரமம் ஏற்படாத வகையில் காத்திருப்பு கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கூடம் பயன்பாடின்றி பூட்டிக்கிடப்பதால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே காத்திருப்பு கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.