தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த குண்டல அள்ளி கிராமத்தில் மழைபெய்யும்போது அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துவிடுகிறது. மேலும் அந்த பகுதி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து 3 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறைக்கு பல முறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மழைநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி தர துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரஷாந்த், குண்டலஅள்ளி.