சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு உடனடியாக நெல்கொள்முதல் செய்யப்படுகிறது. இருப்பினும் இங்கு விவசாயிகள் நெல்லை வாங்குவதற்கு கால தாமதமாவதால் மழையில் நனைந்து வீணாகும் நிலையில் உள்ளது. எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.