சேறும்-சகதியுமாக மாறிய மீன்மார்க்கெட்

Update: 2023-05-03 15:12 GMT
புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமாக நகரின் மைய பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மீன்மார்க்கெட்டில் பொதுமக்கள் நடந்து செல்லும் சாலை சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் மீன்மார்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் வழுக்கி கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி