மதுரை மேல அனுப்பானடி முத்துமாரியம்மன் கோவில் ஊருணி கரை ரோட்டில் அதிகமான நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், வாகனங்களுக்கு விபத்தும் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் அவ்வழியில் செல்வதற்கே வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.