சேதமடைந்த இருக்கைகள்

Update: 2023-05-03 12:12 GMT

மார்த்தாண்டம் வெட்டுவெந்தியில் இருந்து புதுக்கடைக்கு செல்லும் சாலையில் குன்னத்தூர் சந்திப்பில் இருபுறமும் பஸ் நிறுத்தும் உள்ளது. இங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக கான்கிரீட் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது அந்த இருக்கைகள் சேதமடைந்து மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் பயணிகள் அமர முடியாமல் பஸ்சிற்காக காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த இருக்கைகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிறிஸ்டல், குன்னத்தூர்.

மேலும் செய்திகள்