புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-05-03 07:56 GMT

நெல்லை மேலப்பாளையம் கன்னிமார்குளத்தின் கரையில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைமேடையில் சுகாதாரக்கேடாக உள்ளதாக காஜா மைதீன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு சுகாதார பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், உடனே நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்