தர்மபுரி மாவட்டம் கரகதஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு ஆழ்துளை குழாய் பழுதாகி பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து பல முறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் முன் ஆழ்துளை குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரகுபதி, பாலக்கோடு, தர்மபுரி.