கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சின்ன ஏரி மற்றும் தேவசமுத்திரம் ஏரிகள் உள்ளன. இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஏரியின் ஓரங்களில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுகின்றன. இதனால் அந்த வழியில் செல்லும் பொது மக்கள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். மேலும் ஏரியில் ஆகாயத்தாமரை அதிக அளவில் உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகாய தாமரைகளை அகற்றி, குப்பைகளை கொட்டுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.