நடவடிக்கை தேவை
சாமித்தோப்பில் பஸ் நிறுத்தமும், பயணிகள் வசதிக்காக பயணிகள் நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள அய்யா வைகுண்டசாமி பதிக்கு வரும் பயணிகள் இந்த நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்திருப்பது வழக்கம். தற்போது இந்த நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையின் மேல்பகுதியில் விரிசலடைந்து எப்போது வேண்டுமானாலும்
இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்துடன் வெயிலில் நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், சரக்கல்விளை.9597777477.