மணல் திட்டு அகற்றப்படுமா?

Update: 2023-04-30 08:17 GMT

மணல் திட்டு அகற்றப்படுமா?

தாழக்குடியில் இருந்து சந்தைவிளைக்கு செல்லும் சாலையில் புத்தன் கால்வாய் ஆற்றின் மேல் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மக்கள் வசதிக்காக தற்காலிக பாலம் கட்டப்பட்டது. தற்போது புதிய பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், தற்காலிக பாலத்தில் அமைக்க பயன்படுத்திய மண் திட்டுக்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், புத்தன்கால்வாயில் தண்ணீர் சீராக பாய்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய்க்குள் அமைக்கப்பட்டுள்ள மண் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிதம்பரதாணு, தாழக்குடி. 9444649014

மேலும் செய்திகள்